மகனின் முகத்தை முதன்முறையாகக் காட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதி கத்ரீனா – விக்கி!

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் தங்களது மகன் வியான் கவுஷலின் முகத்தை முதன்முறையாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இந்தத் தம்பதிக்கு, 2025-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து 2026 ஜனவரியில் மகனுக்கு ‘வியான் கவுஷல்’ எனப் பெயரிட்டதை அறிவித்தபோதிலும், இதுவரை குழந்தையின் முகத்தைப் பொதுவெளியில் காட்டாமல் ரகசியமாகப் பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், வியானின் முதல் பிறந்தநாளைத் தொடர்ந்து வந்த தீபாவளி பண்டிகையன்று, கத்ரீனா-விக்கி தம்பதி தங்களது குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். மஞ்சள் நிற பாரம்பரிய உடைகளில் மிளிரும் இந்த தம்பதியுடன் அவர்களது மகனும் இணைந்து இருக்கும் இந்தப் புகைப்படம், “எங்களுக்கு மிகவும் பிரகாசமான தீபாவளி” என்ற வாழ்த்துச் செய்தியுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அனன்யா பாண்டே, சோனம் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *