Thoothukudi:மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் வேலை – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

Advertisements

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் உள்ளிட்ட மணிமண்டபங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

வயது: BC, MBC பிரிவைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். SC பிரிவைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 37 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science படிப்பில் சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.20,000. நூலகர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு மாதம் ரூ.7,700 முதல் ரூ.24,000. உயிரியலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி:-

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10.10.2024 கடைசி தேதியாகவும், நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க 18.10.2024 கடைசி தேதியாகயாகவும், உயிரியலாளர் பணிக்கு விண்ணப்பிக்க 5.10.2024 கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *