அயோத்தி தீபத் திருவிழா – ராமர் கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு வழிபாடு!

தீபாவளித் திருநாளில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி இராமர் கோவிலில் தீப தூபம் ஏந்திச் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தீபாவளித் திருநாளையொட்டி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தீபத் திருவிழாவில் கலந்துகொண்டார். தீபாவளியன்று அனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

அயோத்தியில் நடைபெற்ற விழாவில் தாழ்த்தப்பட்ட, நிசாத் இனத்தைச் சேர்ந்த ஏழை எளியோருடன் தீபாவளியைக் கொண்டாடினார். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.

கரச்சேவைபுரத்தில் கோசாலைக்குச் சென்ற யோகி ஆதித்யநாத் அங்குள்ள மாடுகளுக்குத் தீவனம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *