Thangalaan: மிரட்டலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த  டீசர்!

Advertisements

மிரட்டலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த ‘தங்கலான்’ டீசர்!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து ‘தங்கலான்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், நவம்பர் 1-ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் எனவும் படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி, மாறுபட்ட கதைக்களத்துடன், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *