
வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘ராஜன் வகையறா’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ள திரைப்படம் ‘ராஜன் வகையறா’. கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கென் கருணாஸ் மற்றும் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில், ‘ராஜன் வகையறா’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது..




