Hangzhou 2022 Asian Games: கெத்துகாட்டும் இந்திய வீரர்கள்!

Advertisements

பதக்க பட்டியலில் கெத்துகாட்டும் இந்திய வீரர்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: பெண்களுக்கான வில்வித்தை அரையிறுதி ஆட்டம் இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அதிதி கோபிசந்த் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஜோதி 149-146 என்ற புள்ளிக்கணக்கில் அதிதியை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஜோதி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். அதிதி இப்போது வெண்கலப் பதக்கத்திற்காக மற்றொரு போட்டியில் விளையாடுவார்.

படகோட்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜூன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். நேபாள அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

நேபாளத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உதவியுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்திய அணி 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. முகமது அனஸ் யாஹியா, நிஹால் ஜோயல், அமோஜ் ஜேக்கப், மிஜா சாக்கோஆகிய நால் வர் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா பதக்கம் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *