ரஷ்ய வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்.!

நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் ரோமன் ஷபியுல்லினை வீழ்த்தி ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நியூயார்க் நகரில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் ‘நம்பர்-3’ வீரரான ‘ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ரோமன் ஷபியுல்லினை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் அல்காரஸ், போர்ச்சுகல்லின் ஜெய்ம் ஃபாரியாவுடன் விளையாடுகிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *