
மகாராஷ்டிரத்தின் கச்சிரோலியில் நக்சல்பாரி இயக்கத்தின் தளபதி மல்லோசுல வேணுகோபால் ராவ் உட்பட அறுபது பேர் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் கச்சிரோலி மாவட்டத்தில் நக்சல்பாரி இயக்கத்தினரின் செயல்பாடுகளும், மாவோயிச இயக்கத்தினரின் செயல்பாடுகளும் அதிகமுள்ளது.
நக்சல்பாரி இயக்கத்தின் முதன்மையான தளபதிகளில் மல்லோசுல வேணுகோபால்ராவ் என்கிற பூபதியும் ஒருவர். இந்நிலையில் அவரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 60 பேரும் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அரசிடம் சரணடைவதாக நேற்றே தகவல் வந்தது.
இன்று கச்சிரோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேணுகோபால் ராவும், அவரது இயக்கத்தைச் சேர்ந்த 60 பேரும் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் துப்பாக்கிகளை ஒப்படைத்துச் சரணடைந்தனர்.



