தமிழக வெற்றிக்கழக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் நடனமாடிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மேடையில் பாடிய பாடலுக்காக பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்
முன்னதாக வேல்முருகன் மீது சேலம் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது
.இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் பிரபல நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் மேடை ஏறினார். அப்பொழுது அவர் நடிகர் விஜய்யை பார்த்து தான் பாடும் பாடலுக்கு உடன் நடனம் ஆடும்படி கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய்யும் தலையாட்டியபடி சம்மதம் தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து தலைவா விஜய் வாழ்க தமிழக வெற்றி கழகம் வாழ்க என வேல்முருகன் ஆடிப் பாடியபடி நிகழ்ச்சியை கலகக்க வைத்தார் .அப்பொழுது நடிகர் விஜய்யும் கூடவே நடனம் ஆடினார். நடிகர் விஜய் நடனம் ஆடுவதை பார்த்து அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் உற்சாகமடைந்து கைதட்டி மகிழ்ந்தனர் .ஆனால் இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் வேறு மாதிரியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது
ஒரு அரசியல் கட்சி தலைவர் மேடையில் இப்படி நடனம் ஆடலாமா? அதுவும் கரூரில் 41 பேர் மரணம் அடைந்த நிகழ்ச்சி இன்னும் மறையவில்லை அதற்குள் எல்லாவற்றையும் மறந்து விட்டு மேடையில் நடிகர் விஜய் நடனம் ஆடுவது நியாயமானதாக இல்லை .முன்பு அவர் நடிகராக இருந்தார். சினிமாவில் அவர் ஆடிப்பாடியது சண்டை காட்சிகளில் அடித்தது எல்லாம் வரவேற்கத்தக்கது ஆனால் இப்பொழுது ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும் சமயத்தில் அவர் இது போன்று மேடையில் ஆடிப் பாடுவது அநாகரீகமான செயல் என பரவலாக பேசப்படுகிறது
ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்தது குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் இருக்கிறது. நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் விசில் அடித்தான் குஞ்சுகள் என்பதை இந்த சின்னம் நிரூபித்து விட்டது என்ற விமர்சனங்கள் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது .இதனிடையே நடிகர் விஜய் மேடையில் நடனமாடியது குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரனும் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்
நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மேடையில் இப்படி ஆடிக்கொண்டிருக்கிறார் ஒரு அரசியல் கட்சி தலைவர் இப்படி நடனம் ஆடுவது அநாகரிகமானது என அவர் விமர்சித்திருந்தார் .இதற்கிடையே வேல்முருகன் பாடிய பாடல் தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஒரு பக்தி பாடலின் மெட்டு ஆகும் அதாவது மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலின் மெட்டில் தான் அவர் விஜயை புகழ்ந்து பாடினார்
இதற்கும் தமிழ்நாடு முழுவதும் பலத்தை எதிர்ப்பு கிளம்பியது குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினரும் ஹிந்து முன்னணியினரும் போர்க்கொடி பிடித்தனர் .முருக பக்தர்களின் பிரபல பாடலான மருதமலை மாமணியே முருகையா பாடலை நடிகர் விஜய்க்கு புகழும் பாடலாக மாற்றியது தவறு இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல் என அவர்கள் போக்கோடி பிடித்தனர்
இது தொடர்பாக சேலம் மற்றும் நெல்லை என பல மாவட்ட காவல்துறைகளில் வேல்முருகன் மீது புகார் செய்யப்பட்டு இருக்கிறது .இந்த நிலையில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் மருதமலை மாமணியே முருகையா பாடலின்
மெட்டை பயன்படுத்தி பாடியதற்கு பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் மேடையில் பாடிய பாட்டுக்கும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லோரையும் உற்சாகப்படுத்துவதற்காக அப்படி பாடினேன் முருகரை தவறாக பாடுவது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம் இதற்கும் கட்சித் தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நானும் தவறாக பாட வேண்டும் என்று பாடவில்லை ஒருவேளை தவறாக தெரிந்திருந்தால் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதுபோன்ற அரசியல் பின்னணி செய்திகளை தெரிந்து கொள்ள ஜெம் தொலைக்காட்சியுடன் தொடர்பில் இருங்கள் நன்றி வணக்கம்

