
ஈரான் தலைநகரில் உள்ள பாதுகாப்புத் துறைத் தலைமையகத்தின் மீது தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையில் இருந்து தொடர்ந்து நீடிக்கும் தாக்குதல்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அரபு நாடுகளே போர்க்களமாகி விட்டன. ஈரான் தலைநகர் டெகரானில் உள்ள பாதுகாப்புத் துறைத் தலைமையகத்தின் மீது தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேபோல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே சனிக்கிழமை முதல் ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நிகழ்த்திய கொடிய தாக்குதல்களில் ஆயிரத்து 97 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல் கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளத்தையும் ஏவுகணை மூலம் ஈரான் தாக்கியுள்ளது.


