காங்கிரஸ் கேட்கும் 36 தொகுதிகள்..!

Advertisements

நெருக்கடி நிலையில் திமுக இருக்கிறதா .என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஸ்டாலின் ..இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பினை இப்போது பார்க்கலாம் ..

வருகின்ற 2026 சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தனது கூட்டணிகளை உறுதி செய்யும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

வலுவான கூட்டணி என சொல்லப்பட்டு வந்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் கடந்த சில மாதங்களாகவே விரிசல் விழுந்ததாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி  நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும்  பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் பல்வேறுப்பட்ட தகவல்கள் நாளுக்கு நாள்  வெளியாகி வருகின்றன.

அதனைத்  தொடர்ந்து விஜய்யின் ‘ஜனநாயகம்’ படத்தின் தணிக்கை  சான்றிதழ் வழக்கு விவகாரத்தில்  காங்கிரஸ் எம்பிக்கள் விஜய்க்கு சாதகமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல்காந்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து மோடியை நேரடியாக டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இது தான் திமுக தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்தது.  இதனை தொடர்ந்து திமுகவினர் சிலர் காங்கிரஸ் எம்பிகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

மேலும் மாறி மாறி இரு கட்சியினரும் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும்  ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி  விமர்சித்து வந்த நிலையில் எரிச்சலடைந்த காங்கிரஸ் மற்றும் திமுக மேலிடத்தில் இருந்து தலைமையின் தரப்பில், இனி யாரும் கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை தொகுதி பங்கீடு குறித்து விரைவில் நல்ல ஒரு  முடிவெடுக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச திமுகவின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி டெல்லிக்கு சென்றிருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து 36 தொகுதிகளும் மூன்று அமைச்சர்களும் கேட்டு உள்ளதாகவும், ஆனால் திமுகவின் தரப்பில் இருந்து 30 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் மேலிடம் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை எனவும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கவே 36 தொகுதிகள் கேட்டு திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சுமூக தீர்வு ஏற்படுகிறதா அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கப் போகிறதா என்பது அரசியல் விமர்சகர்களிடத்திலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *