கேரளாவில் முடிந்த ரகசிய டீல்..!

Advertisements
தங்கத்தின் விலை போல தமிழக அரசியலில் பிரேமலதா விஜயகாந்த் அரசியல் முடிவும் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கூட்டணியை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் பிரேமலதா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதாக விமர்சனங்கள் கிளம்பத் தொடங்கி இருக்கின்றன.இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் இன்றைய நிலவரப்படி கேரளாவில் கூட்டணி குறித்த டீல் முடிந்ததாக சொல்கிறார்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி செல்வாக்கைப் பெற்ற மருத்துவர் ராமதாஸ் தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்த சூழ்நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தெரியாமல் திண்டாடி வருகிறார் .மூத்த தலைவரும் கிங்மேக்கருமான ராமதாஸ் நிலைமை குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் வேதனை கலந்த விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன
.அதேபோல் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தற்பொழுது பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் மாதக்கணக்கில் இழுத்தடித்து வருவது ஒரு பக்கம் பரபரப்பாக பார்க்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் பின்னடைவான விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேரம் பேசும் பொழுது அதனுடைய ரகசியங்கள் வெளியே தெரிவதில்லை ஆனால் பிரேமலதா விஜயகாந்த் பேசிய பேரங்கள் அனைத்தும் தற்பொழுது தமிழக கிராமங்கள் வரை பரபரப்பாக பேசப்படுகிறது .தங்களுக்கு 20 தொகுதிகள் வரை கேட்கிறார் மகனை ராஜ்யசபா எம்பி ஆக்க வேண்டும் என்கிறார் விருதுநகர் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும். தேர்தல் செலவுக்கு நிதி தர வேண்டும் அமைச்சரவையில் பதவி தர வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைப்பதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரேமலதா விஜயகாந்த் ஒரு நாள் திமுகவையும் மறுநாள் அதிமுகவையும் விமர்சனம் செய்து பேசி வந்தார் .இவரது கூட்டணி பேச்சு குறித்து எரிச்சலும் கோபமும் அடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தலைவர் மு க ஸ்டாலினும் கூட்டணி பேச்சுவார்த்தை கதவை அடைத்து விட்டார்கள் .அதிமுகவை பொறுத்த வரையில் தேமுதிக கூட்டணியில் சேராவிட்டால் அந்த கட்சியை இரண்டாக உடைப்பது என்ற முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பது பின்னணி செய்தியாகும்.
இதனிடையே அரசியல் ரீதியாக இல்லாமல் முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப ரீதியாக பிரேமலதா விஜயகாந்த் இடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது .அதாவது தென் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த் கடைசியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் இதனை தொடர்ந்து அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.முன்னதாக  முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து அரசியல் தொடர்பில்லாத இரண்டு பேர் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
அதன் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரேமலதா விஜயகாந்த் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்தினர் பிரேமலதா விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். தற்பொழுது கூட்டணி விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார் எனவே ஓரளவுக்கு அவர் இந்த பேச்சுவார்த்தையின் போது சமரசமானதாக சொல்லப்படுகிறது .
அந்த வகையில் இறுதி கட்டமாக தனக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக முதல்வர் குடும்பத்தினர் சென்னை அறிவாலயத்தை தொடர்பு கொண்டு பேசினர் இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் இடம் முடிவாக எட்டு தொகுதிகள் ஒதுக்கி தரப்படும் அதற்கு மேல் தொகுதிகளை ஒதுக்கி தருவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லை என்பதை இறுதி முடிவாக தெரிவித்தனர் . இதனைத் தொடர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பிரேமலதா விஜயகாந்த் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இது தவிர தேர்தலுக்குறிய செலவு நிதிகள் தரப்படும் என்பதும் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது மேலும் விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்கி தருவதாகவும் அதில் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினராகலாம் ஒருவேளை தோல்வியை தழுவினாலும் விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருகிறோம் ஆனால் பொத்தாம் பொதுவாக இப்பொழுது ராஜ்யசபாபதவியை ஒதுக்கிதர முடியாது எனவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்தினரிடம் அனைத்து வகையான சம்மதங்களையும் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அங்கிருந்து சென்னை திரும்பினார்.தற்பொழுது அவர் எல்கே சுதீஷ் உள்பட கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஒரு சிலரிடம் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.எனவே இன்றைய நிலவரப்படி இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்கிறது என்ற செய்தியை பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கலாம் என தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *