காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி..!

Advertisements

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் வேண்டிய நண்பரும் கூட எனக் கூறி அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிட தயாராக இல்லை என்று கூறினார்.

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம் அவர் சுற்றுப்பயணத்தை எந்த கிழமையில் வைத்தால் நமக்கென்ன? என முடிவில் பதிலளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *