இந்தியாவுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க டிரம்ப் பேச்சுவார்த்தை..!

Advertisements

இந்தியாவுக்கு 100 சதவீதம் வரை வரி விதியுங்கள் என்று ஐரோப்பிய அதிகாரிகளுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார். இதனைப் பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து வாஷிங்டனில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகள் ரஷ்யாவின் பொருளாதாரப் பாதிப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனாவிற்கு 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *