புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்கா மீண்டும் செயல்படுத்தல்

Advertisements

புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்கா மீண்டும் செயல்படுத்தி வருகிறது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து  கல்வி பயில்வதற்காக, வரும் மாணவர்களுக்கு விசாவை அமெரிக்க வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மாணவர்கள் விசாவுக்கான நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதையடுத்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தங்களின் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளின் விபரங்களை விண்ணப்பங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக ஏதேனும் பதிவிட்டுள்ளனரா என அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த புதிய நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *