
சத்தீஷ்காரில் இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சத்தீஷ்காரின், பிலாஸ்பூர் இரயில் நிலையம் அருகே சரக்கு இரயில் ஒன்று நின்று கொண்டிருந்தப் போது, மெமு இரயில் ஒன்று அந்த வழியே வந்த நிலையில், நின்றிருந்தச் சரக்கு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த, இரயில் விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் பலத்தக் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, காயம் அடைந்தப் பயணிகளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்நிலையில், இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த நபர்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாயும் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தது.




