மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் 10ஆவது மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா 60 ரன்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

