
கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் அரசியல் தலைவர்கள் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கூடியிருந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரெனக் கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பிய நிலையில், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்தனர். இதனை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன. இந்நிலையில் பிரதமர் மோடி கத்தார் அமீருடன் தொலைபேசியில் தனது ஆறுதலைத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், சகோதரத்துவ நாடானக் கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியாக் கடுமையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கத்தாருக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்தார்.



