இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் தில்லிக்கு வந்தடைந்தார்.
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஈரான் அதிபர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தில்லியில் செய்யப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின், தில்லிக்கு வந்தடைந்தார். தில்லி விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் கே.வி. சிங் வரவேற்றார். தொடர்ந்து, அவர் இன்று மதியம், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

