Vellore : மாணவனை கடை உரிமையாளர் மிரட்டியதால் மாணவன் உயிரிழப்பு..!

Advertisements

வேலூரில், கடையில் திருடியதாகப் பத்தாம் வகுப்பு மாணவனை அவமானப்படுத்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என்று கடை உரிமையாளர் மிரட்டியதால் மாணவன் உயிர் மாயித்துக் கொண்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த அரும்பருத்தியைச் சேர்ந்த ராஜேஷ் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவி சசிகலா மகன் சந்தோஷ், நித்திஷ் ஆகியோர் அரும்பத்தியில் வசித்து வருகின்றன.

இதையடுத்து, முதல் மகன் சந்தோஷ் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், மாணவன் சந்தோஷ் அரும்பருத்தியில் உள்ள பங்க் கடை ஒன்றில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது, கடையில் 300 ரூபாய் திருடியதாக பங்கடை உரிமையாளர் கிருஷ்ணவேணி, அவருடைய உறவினர்கள் மாணவனை அரை நிர்வாணப்படுத்திக், காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதில், மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டின் அறையினுள் தனது அம்மாவின் புடவையை எடுத்து தூக்கிட்டு உயிர் மாயித்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து, தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் பிரம்மபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *