சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 75 வயது முதியவர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஐந்து வயதுச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 75 வயது முதியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பட்டுக்கோட்டை பண்ணைவயல் சாலையைச் சேர்ந்த காசிமுத்து என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயதுச் சிறுமியை அழைத்து, நெல்லிக்காய் பறித்துத் தருவதாகக் கூறி தனியே அழைத்துச் சென்றுள்ளார்.

அதன்பின் பாலியல் சீண்டல்கள் செய்ததாகச் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காசிமுத்தைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *