விசிகவைப் பலவீனப்படுத்த நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக திருமா பேச்சு.!

விசிகவைப் பலவீனப்படுத்த நினைத்தவர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை என்று கூறினார். சிலர் விசிகவை எப்படியாவது சிதறடிக்க வேண்டும் என்றும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள் என்று தெரிவித்தார். ஆனால், தற்போது அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், தங்களாலும் விசிகவைப் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், மாற்றுக்கட்சியினரை திமுகவினர் கட்சியில் இணைத்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *