பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

ஆட்சி காட்சிகள் மாறும்போது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், அதிமுகவில் இருந்து தவெகவுக்குப் பிரிந்து சென்றவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். தன்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம்.

ஆனால், தி.மு.க. தலைவர் மற்றும் த.வெ.க. தலைவரை அவர்களால் சுலபமாகப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார். ஆட்சி, காட்சிகள் மாறும்போது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் என்றும், அவ்வாறு வந்தால் அவர்கள் ஜீரோவில் இருந்து தான் அவர்களது அரசியல் பயணம் தொடங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நமது தலைவர்களை வைத்து தவெக வெற்றி பெற்றுள்ளதால், அது உண்மையான வெற்றியாக கருதமுடியாது என்று கூறினார். ஜனநாயகன் படத்தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியும், அவரது ஆலோசகருக்குத் தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், முதலமைச்சருக்கு மேக்கப் போடும் நபருக்கும் வரும் நாட்களில் பதவிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *