அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!

Advertisements
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்தின் பிரெடியில் உள்ள மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. ஏமி ஹண்டர் அதிகபட்சமாக 67 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. இதில், அணியின் கேப்டன் ஹெய்லி மேத்யூஸ், ஸ்டெபானி டெய்லர் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *