‛‛ இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே விவாதிக்கிறது” என குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
ஆமதாபாத்: குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். சுமார் 5,950 கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்களை திறந்து வைத்து, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்றும் (அக்.,30), நாளையும்(அக்.,31) இந்த இரண்டு நாட்களும் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த கோவிந்த் குருஜியின் நினைவு தினம் இன்று.நாளை சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்.
கோவிந்த் குரு தனது முழு வாழ்க்கையும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பழங்குடி சமூகத்தின் சேவைக்காக செலவிட்டார். அவரது சேவை மிகவும் வலுவானது. உலகின் மிக உயரமான சிலையை பார்த்தோம். சர்தார் படேல் மீது எங்களின் உயர்ந்த பக்தியை வெளிப்படுத்தினோம்.
வரும் தலைமுறையினர் சர்தார் படேலின் சிலையை பார்ப்பார்கள். நிலவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவுக்கு நாடு முழுவதும் பாராட்டு கிடைத்தது. நாங்கள் ஜி20 மாநாட்டை எப்படி ஏற்பாடு செய்தோம் என்பதை பார்த்து உலகமே வியப்படைகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே விவாதிக்கிறது.
அம்பாஜி கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினேன். இன்று ரூ.6000 மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் விவசாயிகளை பலப்படுத்தும். நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக குஜராத் மாநிலம் மேஹ்சானாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.


