திருவள்ளூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

திருவள்ளூரில் உள்ள தனியார் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலையில் மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆடை வடிவமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
மேலும், நாட்டில் நலிவடைந்து வரும் எம்பிராய்டரி தொழிலை மீட்டெடுப்பது குறித்தும், தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தொழிற்சாலையில் பணிபுரியும் எளிய தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதிய உணவு அருந்தினார். அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை அங்குள்ள தொழிலாளர்களை நெகிழச் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *