இலக்கிய ஆளுமை பூமணி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

Advertisements

அடித்தட்டு மக்கள் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியவர் எழுத்தாளர் பூமணி  என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் எழுத்தாளர் பூமணி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், சாகித்ய அகாதமி விருதுப் பெற்ற  எழுத்தாளர் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

 

எழுத்தாளர் பூமணியின் மறைவால்  வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *