
வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு விழா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுப் பாடலைப் பாடியதுடன் தாய்நாட்டைக் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.
அப்போது, நாடே முதலில் என்ற உணர்வைத் தேசியப் பாடலான வந்தே மாதரம் முன்னிறுத்துவதாகக் குறிப்பிட்டார். அசாமின் குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று வந்தே மாதரம் பாடலைப் பாடித் தாய்நாட்டுக்கு வணக்கம் செலுத்தினர்.
உத்தரக்கண்ட் தலைநகர் டேராடூனில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பங்கேற்று வந்தே மாதரம் பாடலைப் பாடினர். கோவாவில் நடைபெற்ற வந்தே மாதரம் விழாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.




