Video : சுற்றி வளைத்த தெரு நாய்கள் ! | Street Dogs | Streets of India | CM Stalin | Amit Shah | Gem TV
திருநெல்வேலி பேட்டையில் தெருவில் நடந்து சென்ற மாணவனை நாய்கள் துரத்தியதால், அவன் உயிருக்கு அஞ்சிப் புத்தகப் பையைக் கீழே போட்டுவிட்டு ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியின் சாலைகளிளிலும் தெருக்களிலும் ஆடுமாடுகள், நாய்கள் சுற்றித் திரிவது வழக்கம். இதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அவை கட்டுக்குள் அடங்காத நிலையில் இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் திருநெல்வேலி பேட்டையில் தெருவில் நடந்து சென்ற மாணவனை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஐந்துக்கு மேற்பட்ட நாய்கள் துரத்தும் சிசிடிவி கேமரா காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மாணவன் சாலையில் நடந்து வரும்போது நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனைப் பார்த்துக் குரைக்க அவன் உயிருக்குப் பயந்து புத்தகப் பையைக் கீழே போட்டுவிட்டு ஓடும் காட்சி பார்ப்போரைப் பதைபதைக்க வைக்கிறது.
நாய்கள் குரைத்ததைக் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறி நாயை விரட்டி விடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருக்கிறது. பின்னர் மாணவன் அங்கிருந்து வந்து தனது புத்தகப்பையை எடுத்துச் செல்லும் வீடியோவும் பதிவாகியுள்ளது.

