Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் கமிஷன் அறிவித்து விடும் எனவே தமிழகம் முழுவதும் தற்பொழுது அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது . இதில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது . யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் அவர்களது தேர்தல் வியூகம் என்ன என்பது பொறித்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது .
இந்த சூழ்நிலையில் அதிமுகவில் 50 ஆண்டுகாலம் பணி செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது . இது குறித்து செங்கோட்டையனிடம் கேட்டபோது, அதிமுகவில் நான் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை சந்தித்தவன் 50 ஆண்டுகாலம் பணி செய்த என்னை அந்த கட்சியில் உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கி இருக்கிறார்கள். என் மனம் எவ்வளவு வேதனை பட்டு இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததுதான் என்று பதில் சொன்னாரே தவிர தவெகவில் இணைய போகிறேன் அல்லது இணையவில்லை என்று எந்த பதிலும் சொல்லவில்லை இந்த கேள்விக்கு மிகவும் மௌனம் காத்திருக்கிறார் .
ஆகவே கிட்டத்தட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது உறுதியாகியிருக்கிறது . இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நீக்கப்பட்ட அவரது ஆதரவாளரான ஈரோடு புறநகர் மாவட்ட பொருளாளர் ஆன சத்தியபாமாவும் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் . இது மட்டுமல்லாமல் காரைக்கால் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசனார் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் என பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்கள்.
இதற்கிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நீண்ட காலமாகவே ஒரு கருத்தை தெரிவித்து வந்தார் தமிழ்நாட்டில் மூன்றாவது முக்கிய கூட்டணி ஒன்று அமையும் என்று பேசி வந்தார். தற்பொழுது அவர் பேசியது விஜய் தலைமையிலான மூன்றாவது கூட்டணி என்பதுதான் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது . இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தில் இணைவது குறித்து செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்திருக்க மாட்டார் . அவர் தனக்கு நெருங்கிய சிலருடன் ஆலோசனை செய்த பிறகுதான் முடிவெடுத்து இருப்பார் என்று சொல்கிறார்கள் .
அந்த வகையில் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேசி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது . அந்த வகையில் அடுத்த கட்டமாக தமிழக அரசியல் தலைவர்களில் முக்கியமாக கருதப்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என தெரிகிறது . இதே சமயத்தில் எனது முடிவு என்ன என்பது டிசம்பர் 15ஆம் தேதி தெரியும் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார் .
முன்னதாக அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பை தற்போது அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கழகம் என்ற பெயரில் புதிய கட்சியாக அறிவித்திருக்கிறார். இந்த கட்சி மூலம் அவரும் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்படுகிறது . ஆக மொத்தத்தில் திமுக அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி தற்போது அமைகிறது .
இந்த கூட்டணியில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுக்கு என்ன பதவி வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது அவரைப் பொறுத்தவரையில் தமிழக வெற்றிக்கழக அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தரப்புவதாக சொல்லப்படுகிறது . இது மட்டுமல்லாமல் தற்போது விஜய் தனக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக 24 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் அந்த குழுவை நிறுவகிக்கும் பொறுப்பும் செங்கோட்டையனுக்கு தரப்படுகிறது .
இதற்கிடையே மூன்றாவது கூட்டணி அமையுமானால் அது அதிமுகவிற்கு தான் பலஹீனம் என்ற கருத்துக் கணிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, தற்பொழுது 39 சதவீதம் வாக்கு வங்கியை தனது பக்கம் வைத்துள்ள அதிமுக 29 சதவீத வாக்கு வங்கிக்கு தள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது,
Advertisements


