கோவையை Monster-கள் பகுதியாக மாற்றிய திமுக – நயினார் நாகேந்திரன்.!

Advertisements

தென்னகத்தின் மான்செஸ்டராக விளங்கிய கோயம்புத்தூரைப் பெண்களைச் சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகக் காவல்துறை திமுகவின் ஏவல்துறையாகச் செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டுக் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பரப்பரப்பான சாலையில் கடத்தல் நடந்திருப்பது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *