ஸ்ரீநகர் – ஜம்முதாவி வந்தே பாரத் ரயில் சேவை மே 2 முதல் தொடக்கம்.!

Advertisements

ஸ்ரீநகரில் இருந்து ஜம்முதாவிக்கு நீட்டிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலை மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.
ஸ்ரீநகரில் இருந்து கத்ரா ரயில் நிலையம் எட்டுப் பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரயிலைக் காஷ்மீரின் மிகப்பெரிய நகரமும் ரயில் நிலையமுமான ஜம்முதாவி வரை நீட்டித்துள்ளனர். அத்துடன் எட்டுப்பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 20 பெட்டிகள் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட இந்த ரயிலின் தொடக்க விழா ஜம்முவில் நடைபெற்றது.

இதில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு நீட்டிக்கப்பட்ட ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர். இந்த ரயிலின் வழக்கமான சேவை மே இரண்டாம் நாள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *