போருக்குள் தள்ளப்படும் ஈரான்..காமெனி கொடுத்த வார்னிங்..!

Advertisements
ஈராக்-அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல ஈரான்-அமெரிக்கா இடையேயும் போர் பல ஆண்டுகளுக்கு தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என்று ஈரான் தலைவர் காமெனி தெரிவித்திருக்கிறார். அதே நேரம், அமெரிக்காவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சர்வதேச அளவில் 3வது உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே பேசிய காமெனி, “அமெரிக்க அதிகாரத்தையும் சியோனிச ஆட்சியையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இஸ்ரேல் அமெரிக்காவின் கையில் இருக்கும் கயிறு கட்டிய வளர்ப்பு பிரானி” என்று கடுமையாக சாடியுள்ளார். சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்களை நடத்தியது. ஈரான் வசம் உள்ள அணு சக்தி, அணு ஆயுததத்திற்காக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்று சொல்லி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கான ஆதாரங்கள் எதுவும் பொது வெளியில் வைக்கப்படவில்லை. அதே நேரம் ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தாலும்  இருப்பினும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.ஈரானும் இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்து இஸ்ரேல் மீது சரமாரியாக பதில் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது மட்டுமல்லாது கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை தாக்கியது. இதனால் அமெரிக்கா ஈரான் மீது பயங்கர  கோபத்தில் இருந்துவருகிறது. இந்த சூழல்கள் எல்லாம் சேர்ந்து, ஈரான் மீதான தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு அமெரிக்கா கொண்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஈராக் மீது அமெரிக்கா ஒரு காலத்தில் நடத்தியிருந்த  போர், சுமார் 9 ஆண்டுகள் வரை நீடித்தது. அப்படி ஒரு போரை அமெரிக்கா, ஈரான் மீது உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக ரஷ்யாவை பயன்படுத்தி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா விரும்பியது. ஏனெனில் இன்று ஈரானில் இருக்கும் அணு ஆய்வு மையங்கள் அனைத்தும் ரஷ்யாவின் உதவியால் கட்டப்பட்டது. எனவே ரஷ்யா சொன்னால் ஈரான் மறுக்காது என்று நம்பியது. அது உண்மைதான். ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முன்வரவில்லை.
உக்ரைன் விஷயத்தில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ள நிலையில்  ஈரான் சர்ச்சைக்குள் எப்படி நுழைவது? என பேச்சுவார்த்தைக்கு முன்வர மறுத்துவிட்டது.இப்போது ஈரான் மீதான தாக்குதலுக்கு அனைத்து வாய்ப்புகளும் அமெரிக்காவுக்கு திறந்திருக்கிறது. நீண்ட போருக்கான ஒரு பெரிய தாக்குதலை தொடங்குவது மட்டும் பாக்கி. அதையும் விரைவில் இஸ்ரேல் செய்யும். இப்படி நீண்ட கால போருக்குள் ஈரானை தள்ளுவதன் மூலம், அது சோர்வடைந்து தோல்வியடையும் என்று அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.ஆனால் உண்மை என்னவெனில், ஈரான் இந்த போருக்கு முழுமையாக தயாராகி வருகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *