நாடே உற்று நோக்கிய உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களாக அமைந்தது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 41 ஊழியர்கள் 17 நாட்கள் சிக்கித்தவித்தவர். இறுதியாக 490 மணி நேரத்துக்குப் பிறகுக் நேற்று இரவு 8 மணிக்கு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நவம்பர் 12- ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பிரம்மகால்- யமுனோத்ரி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வந்த சில்க்யார்- தண்டல்கான் கட்டுமானத்தின் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து NTRF, STRF,PRO, NHITCL மற்றும் IDPP போன்ற பல மீட்பு படையினர் அங்கு குவிந்து விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன்,மின்சாரம், தண்ணீர்,மற்றும் உண்வு வங்கி தேவையான ஏற்பாடுகளையும் முதற்கட்டமாக தொடங்கினர்.
தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பல நேரங்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு தோல்வியடைந்து மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் மத்திய , அரசும் மாநில அரசும் இடைவிடாது முயன்று 28.11.23 இரவு 7 மணியளவில் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் கடைசி பகுதியை உடைத்து, இரும்பு குழாய் மூலம் உழைந்து சுரங்கத்தில் இருந்த 41 தொழிலாலர்களையும் மீட்டனர். இரவு 8 மணியளவில் முதல் தொழிலாளி மீட்டு வெளியே வந்தார். பிறகு ஒவ்வொருவராக அனைவரும் ஒரு மணி நேரத்திலேயே மீட்கப்பட்டனர்.
நாடே மகிழ்ச்சி கொண்டது. உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மற்றும் மத்திய அமைச்சர் வி.கே. சாமி ஆகியோர் தொழிலாளர்களை மாலை அணிவித்து கட்டித் தழுவி வரவேற்றனர். அனைவருக்கும் மருத்துவம் முதற்கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டது.
தொழிலாளர்களின் குடும்பத்தினர் மீட்புக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தனர், சமூக வலை தளங்களில் நாடே நன்றி தெரிவித்து வருகிறது. இது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம் ஆகும். பிரதமர் ந்ரேந்திரமோடி விபத்தில் சிக்கிய தொழிலாலர்களுடன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


