
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி டென்னிஸ் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைத் தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
42 வயதாகும் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதிலிருந்து முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடி வருகிறார். இதனால் தான் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடா விட்டாலும் ஐபிஎல் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், தான் அவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெற்றதை அடுத்து, ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வண்ணம் அவர் டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
Tennis time for Captain Saab 💛#MSDhoni #Dhoni pic.twitter.com/SS9Nwa58Ta
— Dhoni Raina Team (@dhoniraina_team) November 28, 2023
இது ஐபிஎல் தொடரில் தொடரில் தோனி விளையாடுவதற்கான பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிட்னஸாக உடலை வைத்திருக்கும் தோனி ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எது எப்படியோ மஞ்சள் நிற ஆடையில் தோனி விளையாடுவாதை பார்க்க இப்போதே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

