
ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அணுஆயுத ஒழிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியளார்களிடம் பேசினார். அப்போது, ஈரானுடனான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இரு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து வருவதாகத் தெரிவித்தார். இதில், ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை பெறக் கூடாது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறினார். எனவே, ஈரானின் அணுஆயுத ஒழிப்பு என்பது ஒப்பந்தத்தில் மிகவும் முதன்மையானதாகும் என்று குறிப்பிட்டார். இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தடையின்றி பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, ஓமன் மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்ததையில் முன்னேற்றேம் ஏற்பட்டுள்ளதே தவிர, இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று கூறினார்.


