பீர்க்கங்காயும், வேர்க்கடலையும் வெச்சு ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க !

Advertisements

உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்தச் சப்பாத்திக்கு சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்தப் பீர்க்கங்காயைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.

இந்தப் பீர்க்கங்காய் தொக்கு செய்வதற்கு வெங்காயம், தக்காளி எதுவும் தேவையில்லை. வேர்க்கடலையும், பீர்க்கங்காயும் இருந்தாலே போதும்.

வீடே மணக்கும் அளவில் சுவையான தொக்கு செய்யலாம். இப்படி தொக்கு செய்யும்போது பீர்க்கங்காய் பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

உங்களுக்குப் பீர்க்கங்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்துச் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பிஞ்சு பீர்க்கங்காய் – 1/4 கிலோ
  • வேர்க்கடலை – 1 கைப்பிடி
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதைத் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வேர்க்கடலை பச்சையாக இருந்தால், அதை வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, தோலை நீக்கிவிட்டு, பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட பீர்க்கங்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
  • அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
  •  பின் அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி.

சுவையான பீர்க்கங்காய் தொக்கு தயார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *