இன்றுடன் முடிவடைகிறதா விஜய்யிடம் கேள்விக்கணை?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும் இன்றுடன் விசாரணையை முடிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் விசாரணைக்காக ஆஜரானர். தொடர்ந்து இன்று 2-ம் கட்ட விசா​ரணைக்​காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் விஜய் ஆஜராகியுள்ளார்.

அதற்காக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அவரிடம் இன்றும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், இன்றுடன் விசாரணையை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *