தை அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்!

Advertisements

ஒகேனக்கல்:

தை அமாவாசையை யொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்துச் செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்ற வற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம்.

மகாளய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்து காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்துத் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இதைத்தொடர்ந்து தை மகாளய அமாவாசையான இன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.

பின்னர் அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்துப் பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருட்களைக் காவிரி ஆற்றில் விட்டனர்

திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காகத் தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது போன்று இன்று தை அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பாணை ஆற்றங்கரையில் காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்து புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் முன்பு ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி காய்கறி அகத்திக்கீரை, வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்துத் திதி கொடுத்துத் தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *