Advertisements

அரபிக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பலை நெருங்கி வந்த ஈரான் ட்ரோனை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
அரபிக் கடலின் சர்வதேச பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கிக் கப்பலை நோக்கி ஈரான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை அமெரிக்கப் கடற்படை வீரர்கள் அதிநவீன போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தினர்.
தொடர்ந்து, இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதுதொடர்பாக அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் ஈரான் ட்ரோன், கப்பலை நோக்கி வந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக இந்த அதிரடி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
Advertisements




