ஈரானின் போர் நிறுத்த முன்மொழிவுகளில் திருப்தி இல்லை….!

நிரந்தர போர் நிறுத்தத்திற்கான ஈரானின் முன் மொழிவுகளில் திருப்தி இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்றும் ஆனால் தற்போதைய முன்மொழிவுகளில் தனக்கு திருப்தியில்லை என்றும் தெரிவித்தார்.

ஈரானில் யார் தலைவர் அவர்களுக்குத் தெரியவில்லை என்று கூறினார். ஈரானிடம் தற்போது கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, மற்றும் பாதுகாப்புத் திறனும் மிகக் குறைவாகவே உள்ளது என்றும் மனித நேய அடிப்படையில், ஒப்பந்தம் செய்துகொள்வதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை, அது அரசியலமைப்புக்கு எதிரானது” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *