பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் துன்பமாக இல்லை – அப்பாவு கருத்து.!

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகாரில் பிரதமர் பேசியது தேர்தலுக்காகப் பேசுகிறார் என்றார். தொடர்ந்து, பீகார் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழக வந்தவர்கள் துன்பமாக இல்லை இன்பமாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

பின்னர், மணிமுத்தாறு பாபநாசம் அணை இணைப்பது குறித்து கேள்விக்கு, வனத்துறை மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது என்று பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறையில் பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்றதாக இருந்த புகார் குறித்த கேள்விக்கு, எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என கூறினார்.

பின்னர் அவர், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தப் போது 25 கோடி, 4 தவணைகளாக சகாரா நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்றதாக டைரி அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *