
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒன்றிய அரசு ஊழியர்களை நியமிக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒன்றிய அரசு ஊழியர்களைப் பணியமர்த்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராகத் திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றுக்கொண்டது.
முன்னதாக, தேர்தல் பணியாளர்களை நியமிப்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்று கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் 30 ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய சிறப்பு அமர்வு நாளை காலை 10:30 மணிக்கு விசாரணை செய்ய உள்ளது.




