M. K. Stalin 71th Birthday: தலைவர்களுக்கு மரியாதையை செலுத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார் முதலமைச்சர்.

இதனிடையே தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதே போல், வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.அப்போது, பெரியார் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டித் தி.க. தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோரும் முதல்வருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *