Lok Sabha Election 2024: மோடியின் உத்தரவாதங்கள் பொய்: அதற்கு இரையாகிவிடாதீர்கள்!

Advertisements

பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது. பிரதமர் மோடியின் உத்தரவாதம் தேர்தல் பொய்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஜால்பைகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது. வடக்கு பெங்காலுக்கு அவர்கள் செய்தது என்ன?. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தேர்தல் பொய். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நாட்டின் அரசமைப்பை பா.ஜனதா அழித்து விட்டது.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனக் கூறி வருகின்றனர்.

அதேவேளையில் தேர்தல் கருத்துக் கணிப்பில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனக் கூறி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *