
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிட்டு தவெக வேட்பாளர் வி. எஸ் பாபுவிடம் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.. இந்நிலையில் , அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 14 – வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்பொழுது அதற்கு சட்டப்படி தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியுள்ளது..ஒருவேளை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் குளறுபடிகள் நடத்திருந்தால் வி.எஸ் பாபுவின் வெற்றி செல்லாது என்றும் சொல்லப்படுகிறது.. இந்நிலையில் , இது குறித்தான பின்னணி தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் மறக்க முடியாத ஒன்று மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்வி.. என்னதான் இவர் பின்புலத்தோடு அரசியலுக்கு வந்தாலும், தனது கடினமான உழைப்பால் அரசியலில் தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் என்றே சொல்லலாம்.. இவர் முதலில் , 1989 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டசபையில் நுழைந்தார்..
பின்னர் 1996, 2001, 2006, தேர்தல்களில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை தொடர்ந்த அவர், 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். அங்கும் 2011, 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று கொளத்தூரில் திமுகவின் கோட்டையாக மாற்றி இருந்தார். நிச்சயம் கொளத்தூரில் ஸ்டாலினுக்கு வெற்றி தான் என்பது திமுகவினரின் எண்ணமாக இருந்தது.தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை…
அந்த அளவுக்கு தொகுதி மக்களை நம்பி இருந்தார்..ஆனால் தேர்தல் முடிவுகள் வேறாக இருந்தது தான் அவருக்கே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம்..இந்நிலையில் , இந்த முடிவைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் அவர் மனு அளித்திருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும், அவை முறையாக செயல்பட்டதா என்பதை தங்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அந்த மனுவை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து, ஆய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மு.க.ஸ்டாலின், கொளத்தூரை திமுகவின் வலுவான கோட்டையாக மாற்றியிருந்தார்.
இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் 74,022 வாக்குகள் பெற்று சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.தேர்தல் ஆணையத்தின் நடைமுறையின்படி, இன்று காலை 9 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த 14 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஆய்வு தொடங்கி உள்ளது..
இதில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வின் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும். இதில் விருப்பமான சின்னங்களுக்கு வாக்குகள் பதிவு செய்து, அதன் முடிவுகள் சரியாக பதிவாகிறதா என்பது சோதிக்கப்படும். இதன் மூலம் இயந்திரங்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்.
இந்த ஆய்வில் ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு அல்லது முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கான விண்ணப்பத்தையும் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த ஆய்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான இந்தச் சோதனையின் முடிவுகளில் ஏதேனும் தவறுகளோ , குளறுபடிகளோ நிகழ்ந்திருந்தால், மீண்டும் அந்த தொகுதிக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது… இந்நிலையில் , வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான இந்தச் சோதனையின் முடிவு என்னவாகப் போகிறது? இந்த அரசியல் பரபரப்பு எத்தகைய திருப்பங்களைத் தரப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!



