தங்கள் படைகள் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை இடைமறித்து அழித்துவிட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா மற்றும் ஈரான் என இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், மோதலில் ஏற்பட்ட ஒரு சிறிய இடைநிறுத்தத்தை உடைத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஈரானின் அனைத்து ஏவுகணைகளையும் தாங்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகவும், அமெரிக்கப் படைகள் விழிப்புடனும் உயர் தயார் நிலையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.




