காமன்வெல்த் ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
மேலும் அவர், ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.


