அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் – கமலா இடையே கடும் போட்டி !!

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில் அடுத்த அதிபர் யார் என்பதை அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதில், யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 7.7 கோடி பேர் ஏற்கனவே தபால் மூலமாகவும், நேரடியாகவும் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். அமெரிக்க நேரப்படி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி முதல் காலை 9.30 மணிக்குள் முடிவடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *