ஆதாரை அடையாள ஆவணமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Advertisements

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், சிறப்புத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அவர்களை பட்டியலில் இருந்து நீக்கியதற்கான காரணத்தையும் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தில் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் மாவட்டவாரியாக வெளியிட்டுள்ளது.இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது ஆதாரை அட்டையை சமர்ப்பித்து மீண்டும் பெயர் சேர்க்க முறையீடலாம் என்று பிகார் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *